May 2, 2021
தண்டோரா குழு
கோவையில் தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், கோவை தெற்கு , கோவை வடக்கு, பொள்ளாச்சி, வால்பாறை , கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பத்து சட்டமன்ற தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி அரசு தொழிற்நுட்ப பொறியியல் கல்லூரி வளாகத்தில் துவஙகியது.
பதிவான தபால் ஓட்டுக்களின் எண்ணிக்கை 19029 .கோவை மாவட்டத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 21,04,932 , இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 68% ஆகும். வாக்கு எண்ணும் மேஜைகள் 9 தொகுதிக்கு தலா 14 மேஜைகளும், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மட்டும் 24 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணப்படும் சுற்றுகள் 21 முதல் அதிகபட்சம் 36 சுற்றுகள் வரை இருக்கின்றன.
தபால் வாக்குகள் எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் இரு மேஜைகள் என மொத்தம் 20 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.