April 29, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் முருகவேல் . இவர் நேற்று இரவு போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு பள்ளிவாசல் முன் உள்ள திறந்த வெளியில் கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த 4.5 டன் ரேஷன் அரிசி, ஒரு டெம்போ வேன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆனைமலை காந்தி நகரைச் சேர்ந்த ரபிக் (39) பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த முகமது ரபிக் (29) ஆனைமலையை சேர்ந்த பக்கிபுல்லா ( 44 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் பக்கி புல்லா அரசு போக்குவரத்து கழக உக்கடம் கிளையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். முகமது ரபிக் இறைச்சிக் கடை வைத்துள்ளார்.ரபிக் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவர்களிடமிருந்து 3 பைக்குகளும் ,4.5 டன் ரேஷன் அரிசி ,ஒரு டெம்போ வேன் பறிமுதல் செய்யப்பட்டது .இவர்கள் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.