April 29, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஏப்.30ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,மறுஅறிவிப்பு வரும் வரை அந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதைப்போல் இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை தொடரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,மே 2 வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழுஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மேலும், தமிழகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.