• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

15 வாகனங்கள் மூலமாக தினமும் 6 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது – மாநகராட்சி கமிஷனர்

April 27, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சி கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட உப்பிலி பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளையும், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மாநகராட்சி கமிஷனர் பார்வையிட்டார்.

பின்னர் ஒண்டிபுதூர் சுங்கம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பேக்கரியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்டதற்காக அக்கடையை மூட உத்தரவிட்டார்.

பின்னர் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்ததாவது:

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது, கபசுர குடிநீர் பருகுவது, மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள செய்வது, அடிக்கடி கைகளை சோப்புபோட்டு கழுவ செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். குடும்ப நபர்களில் யாருக்கேனும் கொரோனா நோய் அறிகுறி இருப்பின் உடனடியாக மருத்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் உள்ள 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 15 வாகனங்கள் மூலமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு 6 ஆயிரம் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் இதனை 8 ஆயிரம் வரை உயர்த்தப்பட உள்ளோம்.

மேலும் அரசு நடவடிக்கைகளின் படி மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து வரும் நபர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசல்களை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முருகன், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க