April 25, 2021
தண்டோரா குழு
கோவையில் 7 மாதங்களுக்குப் பிறகு
ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கொரோனா நோய்பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஏழு மாதங்களுக்கு பிறகு தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் இன்று ஒருநாள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து, இன்று தமிழகம் முழுவதும் ஏழு மாதங்களுக்கு பிறகு முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்தது.அதன் ஒரு பகுதியாக கோவை மாநகா் பகுதிகளில் காந்திபுரம் பஸ் நிலையம்,உக்கடம் பஸ் நிலையம்., டவுன்ஹால்,ஆத்துப்பாலம்,அவினாசி சாலை, ரயில் நிலையம் சாலைகள்., மற்றும் தினசரி காய்கறி மாா்கட், தியாகி குமரன் காய்கறி மாா்கெட், கடை விதி, போன்ற பகுதிளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில்
வெறிச்சோடி காணப்பட்டன.