• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெண்ணிலா திரைக்களம் சார்பில் நடிகர் விவேக்கிற்கு நினைவேந்தல் நிகழ்வு

April 24, 2021 தண்டோரா குழு

பொள்ளாச்சி நஞ்சேகவுண்டன் புதூரில் உள்ள நியூ அருள்ஜோதி ஹோட்டல் அரங்கத்தில் வெண்ணிலா திரைக்களம் சார்பில் மறைந்த மக்கள் கலைஞர் சின்ன கலைவாணர் விவேக் மறைவுக்கு நினைவேந்தல் நிகழ்வும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தயாரிப்பாளர் பொள்ளாச்சி விசு, கோவை மாவட்ட நடிகர் சங்க தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் தலைமையேற்றனர். இதில் நடிகரும் கராத்தே ஆசிரிருமான பஞ்சலிங்கம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சமீபத்தில் மறைந்த திரைப்பபட நடிகர் சாப்ளின் பாலுவின் தாயார் நாகம்மாளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து மரக்கன்று நடும் நிகழ்வை மறைந்த நடிகர் விவேக்கை கதாநாயகனாக பாலக்காட்டு மாதவன் திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சந்திரமோகன் மற்றும் நடிகர் சாப்ளின் பாலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் வெண்ணிலா கே.ரவிக்குமார், நேதாஜி பேரவை தலைவர் வெள்ளை நடராஜ்,பட்டாம்பூச்சி அமைப்பின் ஒருங்கினைப்பாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் முருகன் ஜெ.ராஜன் ஆகியோர் நடிகர் விவேக் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து பேசினர்.

இதை தொடர்ந்து அவரின் திருவுருவ படத்திற்கும்,நாகம்மாளின் திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வினோத், எஸ்.எல்.முருகேஷ்,எஸ்.மகேஸ்வரன், பொள்ளாச்சி ரவி சேகர், ஆனைமலை ரஷீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வெண்ணிலா கே.ரவிக்குமார் நன்றி கூறினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெண்ணிலா திரைக்களம் நிர்வாகிகள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க