• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஏப்ரல் 26 முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன ?

April 24, 2021 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் வரும் 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி,

*தியேட்டர்கள், பார்கள் மூடல்
திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள், பெரிய அரங்குகள் இயங்க அனுமதியில்லை.

*புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம்.

*அனைத்து வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இ.பதிவு கட்டாயம்

*இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

*பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதியில்லை.

*சென்னை உள்பட மாநகராட்சிகளில், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.

*உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி – அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.

*திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க 50 பேர் மட்டுமே அனுமதி.

*அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

*உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி – தமிழக அரசு.

*இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.

*வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி

மேலும் படிக்க