• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாராலிம்பிக் கமிட்டியின் தமிழக சங்கத்தின் தலைமை அலுவலகம் திறப்பு

April 24, 2021 தண்டோரா குழு

பாராலிம்பிக் கமிட்டியின் தமிழக சங்கத்தின் தலைமை அலுவலக துவக்க விழா கோவையில் நடைபெற்றது.புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய தமிழ்நாடு பாராலிம்பி்க் தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர்,சர்வதேச அளவில் கோவையை சேர்ந்த வீரர்கள் சாதிக்கும் விதமாக பல்வேறு கட்டமைப்புகள் கோவையில் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையான மாற்று திறனாளிகளுக்காக உலக அளவில் நடத்தப்படும்.பாராலிம்பிக் கமிட்டியின் தமிழக சங்கத்தின் தலைமை அலுவலக துவக்க விழா கோவையில் நடைபெற்றது.கோவை நேரு ஸ்டேடியம் அருகில் அமைந்துள்ள அலுவலகத்தை தமிழ்நாடு பாராலிம்பிக் தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பாராலிம்பிக் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.தொடர்ந்து சர்வதேச,தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்த மாற்றுத்திறனாளி வீரர்,வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி பேசிய இன்ஜினியர் சந்திரசேகர், தமிழக பாராலிம்பிக் வீரர்கள் சாதிக்கும் விதமாக இந்த சங்கம் என்றுமே உறுதுணையாக இருக்கும் எனவும்,புதிதாக துவங்கப்பட்ட இந்த இடத்தில் பாராலிம்பிக் வீரர்கள் பயிற்சி பெறும் விதமான பிரத்யேக உபகரணங்கள் விரைவில் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்,பாராலிம்பிக்கில் சாதிக்க துடிப்பவர்கள்,முழுநேர பயிற்சிகளில் ஈடுபட்டாலும்,அன்றாட அவர்களின் வேலைகள் பாதிக்காத வகையில் வீடு தேடி சம்பளம் வரும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.தொடர்ந்து அவர்,வரும் ஒலிம்பிக் போட்டிகளில் கோவை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் கட்டாயம் சாதிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

விழாவில் தமிழ்நாடு பாராலிம்பிக் நிர்வாகிகள் ஆனந்தஜோதி,திருபாகர ராஜா, விஜயசாரதி, மற்றும் கோவை அத்லெட்டிக் சங்கத்தின் துணை தலைவர் ரத்னவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க