April 23, 2021
தண்டோரா குழு
வோடபோன் ஐடியா லிமிடெட்டின் துணை நிறுவனமான ‘வி பிசினஸ்’, நிபுணத்துவப் பணியாளர்கள் மற்றும் வணிகங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பல்வேறு போஸ்ட்-பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
தொலைதொடர்புத் துறையின் ஒரு முன்னணி செயல் தீர்வான ‘வி பிசினஸ் ப்ளஸ்’ இன்றைய பணியாளர்களை தொலைதொடர்பு மூலம் இணைக்க, தொடர்புகொள்ள, ஒருங்கிணைக்க, போஸ்ட்-பெய்ட் திட்டங்களால் மேலும் பலவற்றை மேற்கொள்ள உதவுகிறது.
ரூ.299-ல் தொடங்கும் ‘வி பிசினஸ் ப்ளஸ்‘ ஆனது, எந்த இடத்தில் இருந்து செயல்பட்டாலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், சிறு வணிகங்கள், அவற்றின் பணியாளர்களை திறன்மிக்க, பாதுகாப்பான முறையில் இணைப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையைச் செயல்படுத்துகிறது. பேச்சு மற்றும் தரவுகளைத் தாண்டி மொபைல் பாதுகாப்பு, இடம் அறிதல், தரவு குவிப்பு, பொழுதுபோக்கு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு பலன்களை ‘வி பிசினஸ்’ திட்டங்கள் வழங்குகின்றன.
சிறு, நடுத்தர வணிக நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அலுவலகம் மட்டுமில்லாமல் வீட்டிலிருந்தபடியும் பணியாற்றும் வகையிலான வழிமுறைக்கான தேவைகளை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ற மலிவான, வசதியான, பாதுகாப்பான இணைப்புத் தீர்வுகளை எதிர்பார்க்கும் சூழலில் வி பிசினஸில் இருந்து சமீபத்திய போஸ்ட்-பெய்ட் சலுகைகள் வெளியாகியிருக்கின்றன.
‘வி பிசினஸ் ப்ளஸ்’ அறிமுகம் பற்றி வோடபோன் ஐடியா லிமிடெட்டின் தலைமை நிறுவன வர்த்தக அலுவலர் அபிஜித் கிஷோர் பேசுகையில்,
“சாதாரண நிறுவனங்கள், சிறு நடுத்தர வணிக நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்களில் டிஜிட்டல் மாற்றங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது வி பிசினஸ். நிறுவனங்களும் தொழில் முனைவோர்களும் ஒரேமாதிரியாக நெகிழ்வான, பாதுகாப்பான, வசதியான மொபைலிட்டி தீர்வுகளை எதிர்நோக்குகின்றனர்.
தொலைதொடர்புத் துறையின் முன்னணி மொபைலிட்டி தீர்வான ‘வி பிசினஸ் ப்ளஸ்’ தரவு பாதுகாப்பு, பணியாளர் பாதுகாப்பு அண்டு நல்வாழ்வு குறித்த உண்மையான வணிக அக்கறைகளை நிவர்த்தி செய்கிறது. வணிக நோக்கங்களுக்கும் பணியாளர் தொலைதொடர்பு தேவைகளுக்கும் இடையே சிறப்பான சமநிலையை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணியிடங்களை இணைப்பதற்கான, தொடர்பு கொள்வதற்கான, ஒருங்கிணைப்பதற்கான ஒரு தடையற்ற டிஜிட்டல் அனுபவத்தை ‘வி பிசினஸ் ப்ளஸ்’ வழங்குகிறது” என்று தெரிவித்தார்.
இணைப்புக்கு அப்பாற்பட்டு வணிகங்கள், நிபுணர்களுக்கான மதிப்பு கூட்டப்பட தொகுப்பு பலன்களை வழங்குகிறது ‘வி பிசினஸ் ப்ளஸ்’. உதாரணமாக காணாமல் போன சாதனங்கள், வைரஸ்கள், ஸ்பைவேர்கள், அபாயகரமான வெப்சைட்கள், தீங்கிழைக்கும் செயலிகள் அண்டு போலி வெப்சைட்கள் போன்றவற்றுக்கு எதிரான பாதுகாப்பை மொபைல் பாதுகாப்பு உறுதிப்படுத்துகிறது. இன்றுள்ள ஆபத்துமிக்க சூழலில் களத்தில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பதற்கேற்ற ஒரு ஆற்றல்மிக்க கண்காணிப்பு அமைப்பைச் செயல்படுத்துகிறது இடமறிதல் வாய்ப்பு.
தனித்துவமான தரவு குவிப்பு அம்சமானது கார்பரேட் இணைப்புகளில் தரவுகளின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் தரவு குவிப்பை அளிக்கிறது. விருது பெற்ற வி பிசினஸ் மொபைலிட்டி தளம் மற்றும் வி செயலியில் நிறுவனங்களுக்கும் நிபுணத்துவப் பணியாளர்களுக்கும் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ தடையற்ற டிஜிட்டல் அனுபவம் கிடைக்கும்.