April 20, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் 515 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த ஆண்டு முதல் தற்போது வரை மாநகராட்சி சார்பில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில் 42 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதில் 38 ஆயிரத்து 695 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2,833 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 730 பேரும்,தெற்கு மண்டலத்தில் 559 பேரும், மேற்கு மண்டலத்தில் 755 பேரும், கிழக்கு மண்டலத்தில் 496 பேரும், மத்திய மண்டலத்தில் 293 பேர் என மொத்தம் 2,833 பேர் கொரோனா சிசிக்சையில் உள்ளனர்.இவர்களில் 515 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சியில் கடந்த வாரம் 75 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. தற்போது அது 93 ஆக உயர்ந்து உள்ளது. மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காக கடைகளுக்கு நேற்று மட்டும் ரூ.54,150 அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை மாநகராட்சியில் அபராதமாக ரூ.99 லட்சத்து 71 ஆயிரம் விதிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி சார்பில் இதுவரை 90 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.