April 16, 2021
கோவையில் இன்று 583 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள்உயர்ந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் ஒரே நாளில் 583 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,993 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்தார்.இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 706 ஆக உயர்ந்தது.அதே சமயம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 622 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 60,885 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4402 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.