• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏபிபி நெட்வொர்க், தமிழ்நாட்டில் நேரலை ஒளிபரப்பை துவங்கியது!

April 16, 2021 தண்டோரா குழு

ஏபிபி நெட்வொர்க் தனது புத்தம் புதிய டிஜிட்டல் தளமான ஏபிபி நாடு மூலம் தமிழக சந்தையில் நுழைந்துள்ளது. புதிய ஏபிபி நாடு அறிமுகத்தின் மூலம், ஏபிபி நெட்வொர்க் தீவிர போட்டி நிலவும் தமிழ் டிஜிட்டல் செய்தி தளத்தில் தனக்கென ஒரு முக்கியத்துவமுள்ள முன்னேற்றத்தை அடைய திட்டமிட்டுள்ளது.

எந்தவித சார்பற்ற நடுநிலையான மற்றும் நம்பகமான செய்திகளால் பார்வையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் பெரும் நம்பிக்கையைக் கொண்டிருப்பதை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கில் தகவல் முறையாக வழங்கப்படும் மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான உறுதியுடன் ஏபிபி நாடு சந்தையில் நுழைகிறது.

ஏபிபி நெட்வொர்க் பிராந்திய செய்திகள் மற்றும் உள்ளடக்க தளத்தில் ஒரு முன்னோடியாக உருவெடுத்துள்ளது. மேலும் இந்நெட்வொர்க்கின் பிராந்திய தொலைக்காட்சிகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் தங்களது சேவைகளை வழங்கும் அந்தந்த சந்தைகளில் அப்பிராந்தியங்களுக்கென இருக்கும் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளில் தங்களை முழுமையாக இணைத்து கொண்டிருப்பதன் மூலம் தங்களது ப்ராண்ட்களுக்கான வலுவான நன்மதிப்பை பார்வையாளர்களிடையே உருவாக்கியிருக்கிறது.

மேற்கு வங்கம் (ஏபிபி ஆனந்தா), மகாராஷ்டிரா (ஏபிபி மஜா), குஜராத் (ஏபிபி அஸ்மிதா), பஞ்சாப் (ஏபிபி சஞ்சா), உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் (ஏபிபி கங்கா) மற்றும் பீகார் (ஏபிபி பீகார்) ஆகிய மாநிலங்களில் ஏபிபி நெட்வொர்க்கின் பிராந்திய சேனல்கள் ஃ டிஜிட்டல் தளங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நெட்வொர்க் தென்னிந்தியாவிலும் தனது வலுவான செயல்பாடுகளை விரிவுப்படுத்துவதால்,இதன் புதிய டிஜிட்டல் தளம் தமிழ் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் நம்பகத்தன்மையுள்ள உண்மையான மற்றும் பார்ப்பதற்குத் தூண்டும் நிகழ்ச்சிகளை வழங்கும் என உறுதியளிக்கிறது.

இதன் டிஜிட்டல் செய்தி தளம் பல்வேறு பிரிவுகளிலான உள்ளடக்கத் தேர்வுகளை தனது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக தமிழகத்தில் பரபரப்பாக பற்றியெரியும் பிரச்னைகள் குறித்து ப்ரத்யேகமான நிகழ்ச்சிகளை அளிக்கிறது. இதில் நிபுணர்களின் கருத்துகள், தரவு சார்ந்த செய்திகள், காணொலிகள் என பல்வேறு உள்ளடக்கங்கள் இடம்பெறுகின்றன. இளைய தலைமுறையினர் சார்ந்த முக்கிய தலைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையீல் ஏபிபி நாடு தனது பார்வையாளர்களுக்காக, 50 செய்திகள், 10 சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் 20 காணொலிகளை தினமும் ஒளிபரப்புகிறது. அரசியல் பகுப்பாய்வுகள், முக்கிய செய்திகள், பரபரப்பான புதிய செய்திகள் மற்றும் செய்தி தொடர்பான விரிவான அலசல் ஆகியவற்றை முழுமையாக வழங்கும் 360 டிகிரி கோணத்திலான கவரேஜ் மற்றும் பொழுதுபோக்கு, கல்வி, நிதி, விளையாட்டு, தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் போன்றவற்றை பற்றிய ஆழமான நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

ஏபிபி நாடு அறிமுகம் குறித்து பேசிய ஏபிபி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி அவினாஷ் பாண்டே,

தீவிரமான போட்டி நிலவும் தமிழ் டிஜிட்டல் செய்தி தளத்தில் எங்களது செயல்பாடுகளை உற்சாகமாக தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ் உள்ளடக்கச் சந்தை,பரபரப்பான புதிய செய்திகளுக்கானதாக இருப்பதால்,நாங்கள் இச்சந்தையில் நுழைவதற்கு இது மிகச்சரியான நேரம். இச்சந்தையில் இணையம் பயன்படுத்தும் விகிதம் அதிகமிருப்பதோடு, மக்களும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வமுள்ளவர்களாகவும், ஆன்லைனில் செய்தி உள்ளடங்களை அதிகம் பார்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால், ஏபிபி நாடு, தமிழக மக்களின் அதிகரித்து வரும் தகவல் தேவைகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யுமென நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதேநேரம் பிராந்திய செய்தி உலகில், பெரும் அதிர்வலைகளை உருவாக்க எங்களுக்கு இது உதவும் என்றார்.

மேலும் படிக்க