April 14, 2021
தண்டோரா குழு
அம்பேத்கர் புகைப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இன்றைய தினம் சட்ட மாமேதை என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பினர் அவரின் உருவ சிலைக்கும் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவருடன் வருவாய்த்துறை அலுவலர் ராமதுறைமுருகன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.