• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈஷாவின் உதவியால் ரூ.64 லட்சம் Turn over செய்த பழங்குடி பெண்கள்

April 13, 2021 தண்டோரா குழு

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தாணிகண்டி மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் ஈஷாவின் உதவியுடன் சுய தொழில் மூலம் ரூ.64 லட்சம் Turn over செய்து சாதனை படைத்துள்ளனர். அதில் ரூ.23 லட்சம் லாபமும் ஈட்டியுள்ளனர்.

ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என பல்வேறு வழிகளில் ஈஷா உதவி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சமூக கட்டமைப்பில் மிகவும் அடிமட்டத்தில் இருக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் ஈஷா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஈஷாவுக்கு அருகே உள்ள தாணிகண்டி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 11 பழங்குடியின பெண்களை ஒன்றிணைத்து ‘செல்லமாரியம்மன் பழங்குடியினர் மகளிர் சுய உதவி குழு’ 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அவர்களுக்கென்று தனியாக, ஆதியோகி அருகில் ஒரு பெட்டி கடையும், ஒரு பேட்டரி வண்டியும் இலவசமாக வழங்கப்பட்டது.

சில நூறு ரூபாய் முதலீட்டில் தங்களது சுய தொழிலை தொடங்கிய அவர்கள் வெறும் மூன்றே ஆண்டுகளில் ரூ.64 லட்சம் Turn over செய்து சாதனை படைத்துள்ளனர். அத்துடன் ரூ.23 லட்சம் லாபமும் ஈட்டியுள்ளனர். அதில் ரூ.6 லட்சம் முதலீட்டில் புதிதாக ஒரு பேட்டரி வண்டியையும் வாங்கியுள்ளனர். ஆதியோகியில் இருந்து சர்பவாசல் வரை பொதுமக்களை அழைத்து செல்வதற்காக இந்த வண்டியை பயன்படுத்துகின்றனர்.10 பேரும் அமரும் திறன் கொண்ட அந்த வண்டியில் பயணிக்க ஒருவருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கின்றனர்.அந்த வண்டிக்கு ஈஷாவிலேயே தினமும் இலவசமாக சார்ஜ் போட்டு கொள்கின்றனர்.ஏதேனும் சிறு பழுது ஏற்பட்டாலும் கட்டணமின்றி சரி செய்து கொள்கின்றனர்.அதேபோல், பெட்டி கடையில் டீ, காபி, குளிர் பானங்கள் மற்றும் சிற்றுண்டி உணவுகள் போன்றவற்றை விற்பனை செய்தும் லாபம் ஈட்டி வருகின்றனர்.

இதற்கு முன்னர், தின கூலி வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு கொண்டு இருந்த பழங்குடி பெண்கள், ஈஷாவின் உதவியால் இப்போது சுய தொழில் செய்து சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். மேலும், ஈட்டிய லாபத்தில் குடும்பத்தை நன்றாக நிர்வகிக்கும் அவர்கள் வீட்டுக்கு தேவையான மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் மற்றும் பஸ் வசதியற்ற தங்கள் கிராமத்திற்கு எளிதில் சென்று வருவதற்கு வசதியாக பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் வாங்கியுள்ளனர்.

குறிப்பாக, கரோனா ஊரடங்கு காலத்தில் சில மாதங்கள் கடை நடத்த முடியவில்லை. அப்போது அவர்கள் வங்கியில் சேர்த்து வைத்திருந்த சேமிப்பு தொகையை கொண்டு குடும்பத்தை நிர்வகித்தனர். அந்த பழங்குடியின பெண்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் ஆரம்பம் முதல் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க