• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் 24ஆவது தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்பு

April 13, 2021 தண்டோரா குழு

இந்தியாவின் 24ஆவது தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுக்கொண்டார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவின் பதவிக் காலம் நேற்று முடிவடைந்தது.சுனில் அரோராவைத் தொடர்ந்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா ஐஆர்எஸ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில்,புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுஷில் சந்திரா இன்று பதவியேற்றுக்கொண்டார்.தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்கிறார்.

இவர் 2022ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பார். தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கும் சுஷில் சந்திரா 1980ஆம் ஆண்டு பேட்ஜ் வருவாய் துறை அதிகாரி ஆவார்.இவர் கடந்த பிப்ரவரி 15 2019இல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க