April 13, 2021
தண்டோரா குழு
கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 27 வது வார்டு பகுதி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சிக்குட்பட்ட சின்னவேடம்பட்டி வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் 3000த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் டெங்கு ஒழிப்பு பணி, தூய்மை பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 27 வது வார்டு பகுதியில் பணிபுரியும் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னமும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்பளத்தை உடனே வழங்க கோரி சின்னவேடம்பட்டியில் உள்ள வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.