April 13, 2021
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு 10.20 மணியளவில்,உணவு சாப்பிட்டு கொண்டிருந்த பெண் உட்பட பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து என்பவர் கடுமையாக தாக்கினார்.
இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் முத்துவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.இது தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், உதவி ஆய்வாளர் முத்துவை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்திரவிட்டுள்ளார்.