• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பல்வேறு தரப்பினர் பாராட்டிய செல்வி சமித்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

April 12, 2021 தண்டோரா குழு

கோவையில் செல்வி சமித்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் சிறந்த நடனத்தை வெளிப்படுத்திய செல்வி சமித்தாவை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

கோவையை சேர்ந்த ஸ்ரீ நாட்டிய நிகேதன் பள்ளியில் கடந்த 25 வருடங்களாக கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவிகளுக்கு பரத கலை உட்பட பல்வேறு நடனங்களை கற்று தந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நடனபள்ளியில் நடனகலை பயின்று வரும், கோவையை சேர்ந்த செல்வி சமித்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

நேச்சோரபதி இரண்டாம் ஆண்டு பயின்று வரும் சமித்தா யோகா, களரி, கராத்தே போன்ற கலைகள் தெரிந்த இவர்,கடந்த பதினைந்து ஆண்டுகளாக குரு மிருதுளா ராயிடம், நடனம் கற்று வருகிறார். இந்நிலையில் இவரது பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் செல்வி சமித்தா சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

மேலும் படிக்க