April 10, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சினிமா திரையரங்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி ஆய்வு மேற்கொண்டார். அப்போது 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே படம் பார்க்க வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்களா? என பார்வையிட்டார்.
பின்னர் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை ஆய்வு மேற்கொண்ட அவர் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் முகக்கவசம் அணியாமல் இருந்த 27 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து உத்திரவிட்டார். அதே போல் துடியலூரில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சத்தி சாலையில் செயல்பட்டுவரும் தனியார் மாலில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து,சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றார்களா? மாலிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்பமானியைக் கொண்டு வெப்ப அளவு பரிசோதனை செய்யப்படுகின்றதா? எனவும் மாலில் செயல்பட்டுவரும் திரையரங்கத்திற்கு சென்று பொதுமக்கள்முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றார்களா? எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது நகர்நல அலுவலர் ராஜா, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.