• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 4 பேருந்துகளில் பயணிகள் நின்று பயணித்ததால் அபராதம் விதிப்பு

April 10, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முகக்கவசம் அணியாமல் இருந்த 15 நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் பேருந்துகளில் பயணிகள் நின்று பயணித்ததால் 4 பேருந்துகளுக்கு தலா ரூ.500 அபராதம்விதித்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

பின்னர் மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் பெட்ரோல் பங்கில் பணியாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அதன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் செயல்பட்டு வந்த உணவகங்கள், பேக்கரிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம்அணிகின்றார்களா என ஆய்வு மேற்கொண்ட அவர் அப்பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ரெஸ்டாரென்டில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அதன் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்தார்.

இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க