• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகள் தடுப்பூசி போட கொடிசியாவை அணுகலாம்

April 7, 2021 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலை தடுக்க, தமிழக அரசின் தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தத்துடன் நடந்த காணொலி கூட்டத்தில் கொடிசியா கலந்துகொண்டது.

இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது அது கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு 3500 ஆக உள்ளது. பொதுமக்களும்,தொழில் வணிக நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களின் உடல் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த சூழலில் தற்போது ஊரடங்கு கொண்டுவர முடிவு செய்யப்படவில்லை, என்றாலும் கடுமையான விதிமுறைகளோடு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் இணையான பொறுப்பு, அரசாங்கத்தோடு சேர்ந்து பொதுமக்களுக்கும் உள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தாமாகவே முன்வந்து 15 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை ரேபிட் சோதனை செய்து கொள்ள, அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்த விவரங்களை சுகாதாரத்துறை கேட்கும்போது அளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும் இதற்கென்று ஒரு அலுவலரை நியமித்து பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனைகள் ஆகியவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் செய்து அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டியது அவசியம்.

நூறு தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகள் தடுப்பூசி போட விரும்பினால் கொடிசியாவை அணுகலாம். கொடிசியா கோவை சுகாதாரத்துறை உதவி இயக்குநர் மூலமாக அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்.
கொடிசியா இது குறித்த விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்ய திட்டமிட்டு வருகிறது. இது குறித்த தேவையான வழிகாட்டுதல்களை செய்து தர கொடிசியா தயாராக இருக்கிறது.

இவ்வாறு ரமேஷ் பாபு கூறினார்.

மேலும் படிக்க