April 3, 2021
தண்டோரா குழு
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தன் தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் முகாமிட்டு, தன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று கோவை ரயில் நிலையம் பகுதி வந்த கமல்ஹாசன், ரயில் நிலையத்தை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் கலந்துரையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர்களது குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன், தான் வெற்றி பெற்றவுடன் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.