April 3, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 861 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமிராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு,கவுண்டம்பாளையம், சூலூர், வால்பாறை, கினத்துகடவு,சிங்காநல்லூர், பொள்ளாச்சி என 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளில் 2464 மையங்களில் 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 146 மையங்களில் 861 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,‘‘பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமிரா பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளன.இன்னும் ஒரிரு நாட்களில் இந்த பணி நிறைவடையும்’’ என்றனர்.