April 2, 2021
தண்டோரா குழு
குரும்பா, குரும்பர்,குரும்ப கவுண்டர், குருமன்ஸ் முதலான குறும்பர் இன மக்களின் குடும்ப நல சங்கம் வருகின்ற 16வது சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு என குடும்ப நல சங்க மாநில தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற வேட்பாளரும்,அமைச்சருமான எஸ் பி வேலுமணி அவர்களை கோவை அ தி மு க அலுவலகத்தில் சந்தித்து,தங்கள் இன மக்கள் அனைவரும் சார்பாகவும் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சால்வை அணிவித்தார்.
மேலும் தங்கள் இன மக்களின் சார்பாக 8 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.