April 1, 2021
தண்டோரா குழு
கோவையில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் கோவை வந்தடைந்தார்.
இதனையடுத்து இன்று காலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை ஆதரித்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் நடை பயணம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.
அப்போது அங்கு நடை பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களிடையே செல்பி எடுத்துக் கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதனுடன் கோவை தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, சிங்காநல்லூர் வேட்பாளர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.