March 31, 2021
தண்டோரா குழு
தேசிய அளவில் இயங்கி வரும் சிறு குறு தொழில்களுக்கான அமைப்பான தமிழ்நாடு லகு உத்தியோக பாரதி அமைப்பினர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரிப்பதாக கோவையில் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு லகு உத்தியோக பாரதி அமைப்பின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு கோவை கேரளா கிளப் அரங்கில் நடைபெற்றது.இதில் இவ்வமைப்பின் தேசிய மாநில , மற்றும் கோவை மாவட்ட உறுப்பினர்கள் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது,கோவைக்கு நன்கு அறிமுகமான கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனின் பங்களிப்பு தொழித்துறையினக்கு கடந்த ஆண்டுகளில் மிக முக்கியமானதாக இருந்தது என்பதை யாவரும் மறுக்க முடியாது.
குறிப்பாக இராணுவ தளவாடங்களுக்கான உற்பத்தியில் கோவைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கோவையை இராணுவ தளவாடங்களுக்கான உற்பத்தி பகுதியாக அறிவித்தது , மத்திய அரசின் நிதி உதவியோடு அடல் இன்குபேசன் -இராணுவ தளவாடங்களுக்கான புதிய தொழில் முனைவோரை ஊக்கப் படுத்துவதற்காக செயல்படும் மையம் மற்றும் இன்னோவேஷன் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையம் அமைவதில் உறுதுணையாக அவர் இருந்தார் என தெரிவித்தனர்.
மேலும் GST அறிமுக காலகட்டத்தில் மத்திய அரசை நேரடியாக தொழில் துறையினர் அணுகி பேசுவதற்கு வானதி சீனிவாசன், பாலமாக இருந்து, குறை நிறைகளை எடுத்து சொல்வதற்கு உறுதுணையாக இருந்துள்ளதாக குறிப்பிட்ட லகு அமைப்பினர், ஆகவே சிறுகுறு தொழில் முனைவோரின் முன்னேறத்திற்காக அவர் ஆற்றிய உதவியின் அடிப்படையில் வரும் சட்டமன்ற தேர்தலில் கோவை மாநகர தொழில் முனைவோருக்கு மேலும் வளர்ச்சியையும் நல்ல திட்டங்களை தருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான வானதி சீனாவாசனை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம், மாநில தலைவர் . விஜயராகவன்,மாநில இணை பொதுசெயலாளர் சிவகுமார் ,கோவை மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியம் மற்றும் பிற மாவட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.