• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி – ஆட்சியர் நேரில் ஆய்வு

March 31, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவினை சரிபார்க்கும் இயந்திரங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதன் படி கோவை மாவட்டத்தில் உள்ள 4427 வாக்குப்பதிவு மையங்களுக்கு 5316 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 5894 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு காப்பு அறையில் உரிய கண்காணிப்பு கேமரா மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை வடக்கு,கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கை 16-க்கும் மேற்பட்டு இருப்பதன் காரணமாக இம்மூன்று தொகுதிகளுக்கும் கூடுதல் ஒதுக்கீடாக 1569 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணிகளில் மேட்டுப்பாளையத்தில் நஞ்சை லிங்கம்மாள் தொழில்நுட்ப கல்லூரியிலும்,சூலூரில் சமூக நல பாதுகாப்பு மைய கட்டிடத்திலும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க