March 30, 2021
தண்டோரா குழு
நேருநகர், ‘ஜஸ்ட் பிட் ஜிம்’ மற்றும் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் இணைந்து நடத்தும் மாநில அளவிலான ஆணழகன், ‘பிட்னஸ்’ போட்டி கடந்த, 28ம் தேதியன்று நேருநகரில் நடந்தது.
ஜூனியருக்கான, 60, 70, 70+ எடை பிரிவுகளில்; சீனியருக்கான, 55, 60, 65, 70, 75, 75+ எடை பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. வீரர்களுக்கான +5.7 பிரிவில் தஞ்சாவூரை சேர்ந்த ரிகான், திருச்சியை சேர்ந்த ராகுல்ராஜ் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
சீனியர்களுக்கான ஆணழகன் போட்டி:
55 கிலோ எடை பிரிவில், திருச்சியை சேர்ந்த பிரபாகரன், திருப்பூரின் மணிகண்டன்; 60 கிலோ எடை பிரிவில், தஞ்சாவூரின் விஜய பெருமாள், திருச்சியின் ஸ்டாலின்; 65 கிலோ எடை பிரிவில், கோவையின் விக்னேஷ், தஞ்சாவூரின் சிவராஜ்; 70 கிலோ எடை பிரிவில், கோவையின் சதீஷ்குமார், தர்மபுரியின் ராம்குமார் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
போட்டியின் இறுதியில் நடந்த ‘ஓவர் ஆல் சாம்பியன் ஷிப்’ பிரிவில் சென்னையை சேர்ந்த முனிசாமி முதலிடம், மதுரையை சேர்ந்த மணிகண்டன் இரண்டாமிடம் பிடித்து அசத்தினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு ‘ஜஸ்ட் பிட் ஜிம்’ உரிமையாளர் தீபா ராணி கோப்பைகள், ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.