• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுகவும் – பாஜகவும் இந்து – இஸ்லாமியர்களுக்கு இடையே வெறுப்பு அரசியலை உருவாக்கி வெற்றி பெற நினைக்கின்றது -தயாநிதிமாறன்

March 29, 2021 தண்டோரா குழு

அதிமுகவும் – பாஜகவும் இந்து – இஸ்லாமியர்களுக்கு இடையே வெறுப்பு அரசியலை உருவாக்கி வெற்றி பெற நினைக்கின்றது என பிரச்சார கூட்டத்தில் தயாநிதிமாறன் எம்பி குற்றச்சாட்டியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் எம்பி.கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.நெகமத்தில் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.வரதராஜன்,கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து கிணத்துக்கடவு, சிட்கோ, ஆத்துபாலம் பகுதியிலும் தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து, செல்வபுரம், கரும்புகடை பகுதிகளிலும் தீவிர வாக்குசேகரித்தார்.

ஆத்துப்பாலம் பகுதியில் தயாநிதிமாறன் பேசுகையில்,

திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். உங்களின் ஒவ்வொரு வாக்கும் ஏப்ரல் 6 ந்தேதி சிந்தாமல் சிதறாமல், உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் என்ன தவறு செய்தார்கள்.சொந்த நாட்டிலேயே வஞ்சிக்கப்படுகின்றனர்.இஸ்லாமியர்களுக்காக பேசுகின்றீர்களே என்கின்றனர்.இஸ்லாமியர்கள் எப்போதும், மாமன் மச்சான் முறையில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.இந்து முஸ்லீம்களை பிரிக்க வேண்டும் வெறுப்பு உணர்வை கொண்டு வந்து, அதன்மூலம் வெற்றி பெற வேண்டும். வெறுப்பு அரசியலை கொண்டு வந்தால் இந்துக்களின் ஓட்டுகளை பெற்று விடலாம் எண்ணுகின்றனர். எப்போதெல்லாம், சிறுபான்மையினரை ஒடுக்க நினைக்கின்றனரோ,அப்போதெல்லாம் தளபதி மு.க.ஸ்டாலின் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.

சிஏஏ சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவோம் என தளபதி கூறினார். ஆனால், மேலவையில் உள்ள அதிமுக உறுப்பினர்கள், 11 பேரும், அதிமுக எம்பியான,ஓபிஎஸ்சின் மகன், பாமக அன்புமணியும் ஆதரித்து வாக்களித்தனர்.ஒவ்வொரு விசத்திலும் எடப்பாடி பொய் பேசுகின்றார்.தவிழ்ந்து போயி பதவியை பெற்ற எடப்பாடி, முதலில் சசிகலாவுக்கும், ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் துரோகம் செய்து வருகின்றார். ஜெயலலிதா சாவில் மர்மம் உண்டு என்று கூறியது ஓபிஎஸ். அதன்பிறகு அவரை எடப்பாடி சேர்த்துகொண்டார். ஆறுமுகசாமி கமிஷனும் அமைக்கப்பட்டது. ஆனால், அதில் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. ஆனால், தளபதி வந்தவுடன் ஜெயலலிதாவின் மர்ம் மரணம் கண்டுபிடிக்கப்படும். அதில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

ஜமாத்தால் தான் கொரானா பரவியதாக இஸ்லாமியர்களை பாஜக கூறியது. அப்போது, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரே தலைவர் தளபதி, ஒவ்வொரு வங்கி கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் வரும்னு மோடி சொன்னாரு. வந்ததா? என கேள்வி எழுப்பியவர், கைதட்டுங்க.விளக்கை அணையுங்கணு சொன்னார் மோடி போனதா கொரோனா என கேள்வி எழுப்பியவர், கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 5 ஆயிரம் கொடுங்கனு தளபதி கூறினார். ஆனால், எடப்பாடி கொரோனா காலத்தில் ரூ1000 கொடுத்தார்.

தளபதி சொன்ன மாதிரி, திமுக ஆட்சி வந்தவுடன், ரூ4 ஆயிரம் கலைஞர் பிறந்தநாளுக்கு வழங்க உள்ளார். கேஸ் ஆயிரம் ரூபாய்கு போயி விட்டது. கேஸ்சுக்கு ரூ100 மானியமும், பெட்ரோல் டீசல் விலையும் குறைக்கப்படும் என தளபதி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.நம்ம வீட்டு பிள்ளைகள் மருத்துவராக வேண்டும் என ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி கொண்டு வருவேன் என்றார். புதிய கல்வி கொள்கையில் நீட் வரும். இந்த தேர்தல் நமக்கான தேர்தல் மட்டுமல்ல, நம்ம பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல். பாஜகவிற்கு இந்த தேர்தல் மூலம் பாடம் புகட்டுங்கள், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுகவை வெற்றி பெற வையுங்கள் என்றார்.

இந்த பிரச்சாரத்தின்போது, தொகுதி பொறுப்பாளர் பூச்சி முருகன், பகுதிகழக பொறுப்பாளர்கள் எஸ்ஏ.காதர், கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க