March 29, 2021
தண்டோரா குழு
கோவை பேரூர் பகுதியில் அமைந்துள்ள சாந்தலிங்க அடிகளார் திருமடத்திற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் தெற்கு தொகுதியில் வேட்பாளருமான கமலஹாசன் வந்திருந்தார். சாந்தலிங்க மருதாச்சல அடிகாளரிடம் சுமார் ஒரு அரை மணி நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்த கமல்ஹாசன் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமக்கு ஆதரவு அளிக்க கேட்டுக்கொண்டார்.
பின்னார் உங்களுடைய திட்டங்கள் அனைத்தும் நடைமுறைபடுத்த முயற்சியுங்கள் என அடிகளார் கேட்டுக்கொண்டார். மேலும்,அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு குரல் கொடுக்கனும். அப்படி வந்தால் இன்னும் கொஞ்சம் மறுமலர்ச்சியை எதிர்பார்க்கலாம் என கமலஹாசனுக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் அறிவுரை வழங்கினார்.