March 28, 2021
தண்டோரா குழு
கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும் பிரதமர் தேவையில்லை கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் இன்று தெற்கு தொகுதிக்குட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர்,
கோவை தெற்கு தொகுதியின் முகமாக நான் இருப்பேன், கட்சி தொடங்கிய புதிதில் வீதிக்கு ஒரு நபர் எனது கட்சியிலிருந்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இப்போது வீட்டிற்கு ஒரு நபர் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வார்டிலும் எம்எல்ஏவின் அலுவலகம் அமைக்கப்படுவதால் மக்களின் பிரச்சனைகளை எளிதாக நான் அறிந்து கொள்ள முடியும். நான் எப்போதும் மக்களின் இதயத்தில் இருக்கிறேன். நான் சினிமா நட்சத்திரமாக இருப்பது பெரிய விஷயம் அல்ல உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருக்க விரும்புகிறேன் அதற்கான வாய்ப்பளியுங்கள்.
100 நாட்களில் முடியும் என்று மற்ற கட்சிகள் கூறி 10 வருடகாலமாக செய்யாமல் இருப்பதை நான் வெற்றி பெற்றால் 100 நாட்கள் செய்து காட்டுகிறேன். கோவையை இந்தியாவின் மாபெரும் நகரமாக மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும் பிரதமர் தேவையில்லை என்றார்.