March 27, 2021
தண்டோரா குழு
மநீம வேட்பாளர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கோவையில் நடிகை சுஹாசினி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இந்நிலையில், இன்று அவருக்கு ஆதரவாக நடிகை
சுஹாசினி பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட தியாகி குமரன் வீதியில் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், சுக்கரவார்பேட்டை, சின்ன எல்லை தெரு, கிருஷ்ணப்பா தெரு, பட்டுப்பூச்சி தெரு, பிள்ளையார் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
மேலும்,டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்களித்து, மநீம தலைவர் கமல்ஹாசனை வெற்றிபெறச் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார். பிரச்சாரத்தின்போது, ஏராளமா பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்டோர் அவருடன் மிகுந்த ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.