March 27, 2021
தண்டோரா குழு
ஐ லியோனி பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிவித்துள்ளார்.
கோவையில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட ஐ லியோனி பெண்கள் குறித்து பேசியது சர்ர்சைக்குள்ளானது.இந்நிலையில் இன்று தொண்டாமுத்தூர் தொகுதி க்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,
தான் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்ளவதாகவும் நாட்டு மாட்டினை என்னுடன் இணைத்து தெரிவிக்க பேசிய அவர் நாட்டு மாட்டுப்பால் நல்லது என கூறியிருக்கலாம் அதைவிடுத்து அந்த உதாரணம் தேவையற்றது என வருத்தத்தை பதிவு செய்தார். மேலும் அன்றே அவர் பேசும் போது நான் கையை பிடித்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வேலுமணி தமிழ் சமூகத்திற்கு எதிரானவர் என்றும் எடப்பாடியாரிடம் கூட யதார்த்தம் ஒரு ஓரத்தில் இருக்கிறது. ஆனால் வேலுமணி எடப்பாடியை விட அதிகம் கொள்ளையடித்தவர் என விமர்சித்த அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் தொண்டாமுத்தூர்க்கு செய்ய உள்ள வாக்குறுதிகளை தெரிவிக்கும் போது வேளாண் சுற்றுலா ,திராட்சை மதிப்பு கூட்டு தொழிற்சாலை,அரசு பாலிடெக்னிக் கல்லூரி , மருத்துவமனை தரம் உயர்த்தல் உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டார்.
தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத விமான விரிவாக்கம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அவர் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றது குழப்பத்தை ஏற்படுத்தியது.