• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொண்டர்களுடன் மாட்டு வண்டியில் வந்து பிரச்சாரம் செய்த வானதி ஸ்ரீனிவாசன் !

March 27, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தொண்டர்களுடன் மாட்டு வண்டியில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.மாட்டு வண்டியில் வந்த வானதி சீனிவாசன் ,அதில் அமர்ந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.அவருடன் ஏராளமான பா.ஜ.க மற்றும் அதிமுக தொண்டர்கள் மாட்டு வண்டியின் பின்னால் அணிவகுத்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தமிழ்நாடு ரேக்ளா கிளப் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க