• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏபிபி நெட்வொர்க்-சிவோட்டர் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி முன்னிலை

March 26, 2021 தண்டோரா குழு

ஏபிபி நெட்வொர்க்-சிவோட்டர் கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தெளிவான முன்னிலை பெற்றுள்ளது. இந்த கருத்துவாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் 46 சதவீத வாக்குகளையும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 34.6 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ஏபிபி நெட்வொர்க் நான்கு மாநில சட்டபேரவைத் தேர்தல் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான கருத்துக் கணிப்புகளை தமது ஆய்வு கூட்டு நிறுவனமான சி.வோட்டருடன் இணைந்து ஏபிபி நெட்வொர்க் நடத்தியது. இந்தக்கருத்துக்கணிப்பு, இந்த தேர்தலில் ஐந்து மாநிலங்களில் மக்களின் வாக்களிக்கும் நடைமுறை எவ்வாறு அமையும் என்பதன் தெளிவான நிலையை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏபிபி நெட்வொர்க்-சிவோட்டர் கருத்துக் கணிப்பில், பொது மக்கள் தெரிவித்த கருத்துக்களின்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 46 சதவீத வாக்குகளைப் பெற்று (173 முதல் 181 இடங்கள்) தமிழ்நாட்டில் முன்னணியில் உள்ளது. அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) 34.6 சதவீதவாக்குகளைப் பெற்று (45 முதல் 53 இடங்கள்) இரண்டாவது இடத்தில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் (எம்.என்.எம்) 4.4% வாக்குகளுடன் (1 முதல் 5 இடங்கள்) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கேரளாவில், இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) 42.4 சதவீத வாக்குகளுடன் (71 முதல் 83 இடங்கள்) முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) 38.6 சதவீத வாக்குகளைப் பெற்று (56 முதல் 68 இருக்கைகள்) இரண்டாவது இடத்தில் உள்ளது. பாஜக 16.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது (0 முதல் 2 இடங்கள்).

புதுச்சேரியில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) 47.2 சதவீத வாக்குகளைப் பெற்று (19 முதல் 23 இடங்கள்) முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) 39.5 சதவீத வாக்குகளைப் பெற்று (7-11 இடங்கள்) இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்ற கட்சிகள் வெறும் 13.3 சதவீத வாக்குகளுடன் (0 முதல் 1 இருக்கை வரை) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

கணக்கெடுப்பு நடைமுறை மற்றும் கணக்கெடுப்பு விவரங்களைப் பொறுத்தவரை, சிவோட்டர் தமிழகத்தில் 1513 பேரிடமும் கேரளாவில் 1735 பேரிடமும் புதுச்சேரியில் 1002 பேரிடமும், அசாமில் 1117 பேரிடமும், என்ற அடிப்படையில் கருத்துகள் கேட்கப்பட்டன. இது சிஏடிஐ தொலைபேசி வழி ஆய்வு முறை மூலம் நடத்தப்பட்டது. முடிவுகள் 3 சதவீத அளவுக்கு மாறுபாடு இருக்கக் கூடும். அதாவது இந்த கணிப்புகள் உண்மையான முடிவுகள் வரும்போது அதை ஒப்பிடும்போது 3 சதவீதம் அளவுக்கு கூடுதல் அல்லது குறைவாக இருக்கலாம். இதன் நம்பகத் தன்மை 95 சதவீதம் அளவுக்கு இருக்கும்.

மேலும் படிக்க