• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேரு கல்வி குழுமத்தில் வணிக பொறிப்பகம் துவக்கம்

March 26, 2021 தண்டோரா குழு

கோவை நேரு கல்வி குழும நிறுவனங்களின் சார்பாக அதன் ஒரு மைல்கல்லாக ரூ.15 கோடி மதிப்பீட்டிலான வணிக பொறிப்பக திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

கோவை நேரு குழும தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் பொறிப்பகத்தை, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் அங்கீகாரம் செய்துள்ளது.

துவக்க விழாவில், தேசிய அறிவியல் தொழில்நுட்ப துறையின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகதலைவர் மற்றும் ஆலோசகர் விஞ்ஞானி டாக்டர் அனிதா குப்தா கானோலி காட்சி மூலம் துவக்கிவைத்தார். மேக் கன்ட்ரோல்ஸ் அன்ட் சிஸ்டம்ஸ் பி லிமிடெட் துணைத்தலைவர் கே. தில்லை செந்தில் பிரபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஈடிடிஐ அகமாதாபாத், திட்ட இயக்குனர் எஸ்.பி சரீன் சிறப்புரையாற்றினார்.

இந்திய மகளிர் தொழில் முனைவோர் அமைப்பின் நிறுவனர் திருமதி. மகாலட்சுமி சரவணன் கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.
நேரு கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் அட்வகேட் டாக்டர் பி.கிருஷ்ணதாஸ்,நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான டாக்டர் பி. கிருஷ்ணக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 32 புதுமை படைப்பாளர்கள், புதிய நிறுவன தொழில் முனைவோர் பங்கேற்றனர். பொறிப்பகத்தின் இயக்குனர் டாக்டர் பி. வைகுண்டசெல்வன் அனைவரையும் வரவேற்றார். மேலாளார் வி. சத்திய மூர்த்தி நன்றி கூறினார்.

மேலும் படிக்க