• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் குதிரை வண்டி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

March 26, 2021 தண்டோரா குழு

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் குதிரை வண்டி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் 100 சதவீதம் வாக்குபதிவு செய்ய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு சார்பில் மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் குதிரை வண்டி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர் துவக்கி வைத்தார்.

இது குறித்து பாஸ்கரன் கூறுகையில்,

கோவையில் உள்ள 4 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்கள் வாக்குகளை நேர்மையாக செலுத்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தோம்.இதற்காக 3 குதிரை வண்டிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் ஒட்டி, ஓட்டுநர்களுக்கு தேர்தல் தொடர்பான தொப்பி அணிவிக்கப்பட்டுள்ளது.இந்த குதிரை வண்டிகள் அவினாசி சாலை, திருச்சி சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும்.” என்றார்.

மேலும் படிக்க