• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க – கோவையில் நடிகை நமீதா பிரச்சாரம் !

March 26, 2021 தண்டோரா குழு

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று அவருக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.

கோவை காந்திபுரம் ராமர் கோவில் பகுதியில் பிரசசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்பொழுது பேசிய அவர்,

வானதி சீனிவாசன் எங்கு பிறந்து இங்கு வளர்ந்து உங்களுக்காக சேவை செய்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களில் இந்த தொகுதி மக்கள் 18 ஆயிரம் பேருக்கு மோடியின் திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளார். 300 பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விக்கு வருடம் பத்தாயிரம் ரூபாய் வழங்கி உள்ளார்.அது மட்டுமின்றி அனைத்து விழாக்களுக்கும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு கலாச்சாரமும் கடவுள் நம்பிக்கையும் உள்ள பூமி என்று தெரிவித்த அவர் அந்த நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு எப்படி ஓட்டு போடுவது என்றும் கேள்வி எழுப்பினார்.எனவே இங்கேயே பிறந்து உங்களுக்காக சேவை புரியும் வானதி சீனிவாசன் அக்காவிற்கு வாக்களியுங்கள் என்றும் அப்பொழுதுதான் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவரது பிரபல வசனத்தில் “மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க.கோவையில் தாமரை மலரும் தமிழ் நாடு வளரும்” என்று தெரிவித்தார். பிரச்சாரத்திற்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து நடனமும் ஆடினார்.

மேலும் படிக்க