• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக நூதன முறையில் பிரச்சாரம் !

March 26, 2021 தண்டோரா குழு

கோவையில் கருப்பு துணியால் கண்களை கட்டி கொண்டு பல மைல் தூரம் இருசக்கர வாகனத்தில் சென்றபடி அ.தி.மு.க.அரசின் சாதனைகளை எடுத்து கூறி அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக நூதன முறையில் பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை குணியமுத்தூரை சேர்ந்த யு.எம்.டி.ராஜா விநோதமான முயற்சியாக அ.தி.மு.க.அரசின் சாதனைகள் மற்றும் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் படி அவர் கண்களை கருப்புதுணியால் கட்டியபடி தனது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்றபடி பிரச்சாரம் செய்து வருகிறார்.

முன்னதாக அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கண்களை திறந்தபடி கூட சாலையில் செல்ல முடியாதபடி சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமாக இருந்த்ததாகவும் ஆனால்,அமைச்சர் வேலுமணி உள்ளாட்சி துறை பொறுப்பேற்ற பிறகு சாலைகள் மட்டுமின்றி பல்வேறு கட்டமைப்புகள் கோவை உட்பட தமிழகம் முழுவதும் மேம்படுத்தபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே இந்த சாரனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறுவதற்காக தாம் இந்த விநோத பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக இந்த சாதனை நிகழ்வு துவக்க நிகழ்ச்சியில் குணியமுத்தூர் பகுதி கழக செயலாளர் மதனகோபால் மற்றும் கோகுல் குமார்,முந்திரி கோபால்,ஜகன்,பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க