• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட கிளைகளை தொடங்க திட்டம் – 5 கே கார் கேர் மையத்தின் நிறுவனர் பேட்டி !

March 26, 2021 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்ட கிளைகளை தொடங்க திட்டம் 5 கே கார் கேர் மையத்தின் நிறுவனர் கார்த்திக் சின்ராஜ் கூறியுள்ளார்.

கோவை துடியலூர் 5கே கார் கேர் மையத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா மைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 5 கே கார் கேர் மையத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் சின்ராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்,

துடியலூர் 5 கே கார் கேர் மையம் இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக வாடிக்கையாளருக்கு சேவையாற்றி அவர்களின் நன்மதிப்பைப் பெற்று உள்ளது. மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து ஆண்டு விழாவை கொண்டாடினோம்.தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்ட கிளைகளை தொடங்க உள்ளோம்.

மேலும் கர்நாடகா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டு வருகிறது.இந்த மையத்தில் ஆரோ வாட்டர் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கொண்டு தான் கார்கள் கழுவப்படுகிறது.ஆர்கானிக் போம் என்ற தொழில்நுட்பம் மூலம் கார்கள் கழுவப்படுவதால், துருப்பிடிக்காமல் இருக்கும்.பல ஆண்டுகள் புதிது போன்ற தோற்றத்துடன் இருக்கும். இதேபோல் யு.வி ப்ரொடக்சன், கிளாஸ் பாலீஸ் உள்ளிட்ட சேவைகள் ஜெர்மன் தொழில்நுட்ப கருவிகள் மூலம் செய்யப்படுகிறது.

குறைந்த கட்டணத்தில், வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும் சேவைகளைப் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்றார்.

பேட்டியின்போது துடியலூர் 5 கே கார் ஷோரும் உரிமையாளர் ஜெகன்,கிளையின் மேலாளர் கவுதம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க