• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மநீம கூட்டணி தான் முதல் அணி, மற்றது எல்லாம் பி டீம் – சரத்குமார்

March 25, 2021 தண்டோரா குழு

மநீம கூட்டணி தான் முதல் அணி, மற்றது எல்லாம் பி டீம் என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

எங்கள் கூட்டணி வெற்றி பெற கடுமையான முயற்சி செய்கிறோம் எனவும், மக்கள் நினைத்தால் எங்களது கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமெனவும் தெரிவித்தார். கமல்ஹாசனை வெளியூர்காரர் என பரப்புரை செய்வதை வேடிக்கையாக பார்க்கிறேன் எனவும், எங்களுக்கு அரசியல் தொழிலல்ல எனவும் கூறிய அவர், கமல்ஹாசன் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.

யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம் என்பது தான் ஜனநாயகம் எனவும், மநீமவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மூலம் டார்கெட் செய்கின்றனரா என்ற எண்ணம் உருவாகிறது எனவும் அவர் கூறினார். கருத்துக்கணிப்புகள் தவறாக கூட இருக்கலாம் எனவும், கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு பொய்யாக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

மநீம கூட்டணி தான் முதல் அணி. மற்றது எல்லாம் பி டீம் எனவும், தேர்தல் முடிந்த பிறகு கணக்கெடுப்பு நடத்திய பின்னர், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுத்து இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். திராவிட கட்சிகள் வாக்கு வங்கியை பணம் கொடுத்து வைத்துள்ளனர் எனவும், எங்களது கூட்டணியின் வெற்றி காலதாமதம் ஆனாலும், வெற்றி உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க