• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மக்கள் நிச்சயம் மாற்றத்திற்கு வழி வகுப்பார்கள் – டாக்டர் ஆர் மகேந்திரன்

March 25, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் டாக்டர் ஆர் மகேந்திரன் நேற்று சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை சிங்காநல்லூர் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் டாக்டர் ஆர் மகேந்திரன் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று 74 வது வார்டுக்குட்பட்ட தலாமத் நகர் இலாஹி நகர், பிஸ்மி நகர், ஜீவன் நகர், வள்ளல் நகர், சபா கார்டன் மற்றும் 75 வார்டுக்குட்பட்ட ஜி எம் நகர், சிவராம் நகர், காமாட்சிபுரம், பாரதி நகர், காமாட்சி அம்மன் கோவில் வீதி, கருணாநிதி நகர், சிந்தாமணி, பாரதி நகர் 3வது வீதி, அருணாசல தேவர் காலனி, 80 அடி ரோடு பல்வேறு பகுதிகளில் தங்கள் கட்சி சின்னமான டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில் கரும்புக்கடை பகுதியில் இஸ்லாமிய மக்கள்
அதிகமாக வாழும் பகுதியில் பேசியவர்,

அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து உள்ளது. இதனால் நீங்கள் அதிமுகவை புறக்கணிக்க வேண்டும். அதேபோல், இதற்கு முன்னாள் திமுகவும் பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் கொள்ளை புறமாக பாஜக உள்ளே நுழைய முயற்சி செய்யலாம். இந்த இரண்டு திராவிட கட்சிகளும் ஊழலுக்கு பெயர் போனவை.

இதற்கு முன்னாள் சிங்காநல்லூர் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திமுகவை சேர்ந்த நா.கார்த்திக் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 19-வார்டுகளில் ஒரு வார்டுக்கு கூட போகாமல் இருந்துள்ளார் என்பது அவரது சிறப்பம்சம்.17 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.நிதியில் அவர் என்ன செய்தார் மக்கள் நீங்கள் கேட்க வேண்டும்.

அவர் வெறும் போராட்டங்கள் மட்டுமே அவர் நடத்தியுள்ளார். போராட்டம் நடத்தாமல் வளர்ச்சியை கொடுக்க முடியும். கோவையில் மக்கள் நிச்சியம் மாற்றத்திற்கு வழி வகுப்பார்கள் என்றார்.

மேலும் படிக்க