• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வானதியின் மைலாப்பூர் முகவரியை சொல்லட்டுமா? – கோவையில் கமல்ஹாசன் பேட்டி !

March 24, 2021 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் மநீம தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதிக்கான உறுதிமொழிகளை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் இதேபோன்ற திட்டங்களுடன் உள்ளனர். மற்ற தொகுதிகளிலும் இருந்தாலும் என் தொகுதி மக்களுடன் தொடர்பிலிருந்து நிதமும் பேசி வருகிறேன். இது வெறும் பேச்சாக இல்லாமல் செயலாக மாற வேண்டும்.

கோவை தெற்கு மட்டுமின்றி, கோவை அம்மன் குளம் பகுதியில் பார்த்த அதே குறைகள் போன்று தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகள் வாழும் பகுதிகளில் உள்ளது. கழிவுநீர் நடு சாலையில் இருப்பதால் வாகனம் செல்லும்போது பாதசாரிகள் மேல் தண்ணீர் தெளிக்காமல் இல்லை. குடிநீரும் கழிவுநீரும் கலந்து விட்டதாக தமிழகம் எங்கும் புகார்கள் உள்ளன. இதெல்லாம், அரசின் ஆதார வசதி. பெண்கள் இரவில் நடமாடாத முடியாத வகையில் தெருவிளக்குகள் இல்லை. அதில், தெற்கு தொகுதி விதி விலக்கில்லை.

ஆரம்பப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆரோக்கியமான கழிப்பிடம் இல்லை. குப்பைகள் கொண்ட காம்பவுண்டில் பள்ளி உள்ளது.நடிகர், வெளியூர்காரர் என்ற பிராச்சாரத்தை ஏற்கனவே ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர். முறியடித்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழன் எழுதிய கனியன் பூங்குன்றன் அந்த உணர்வு எல்லா தமிழனுக்கும் உண்டு. கோவை மக்களுக்கும் உண்டு.

நம்ம வீடுனு சொல்லும் கோவை மக்கள் என்னை அவர்களின் ஒருவராக நினைத்து பல காலமாகிவிட்டது. கடவுள் ஸ்தோத்திரம் அல்லது என்னை நிந்தித்தால் நிம்மதியாக இருப்பதால் என்னை தொகுதிக்கு அந்நியர் என சொல்லலாம்.

மத்திய அரசின் வேட்பாளர் என்பதால் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வர முடியுமென்ற பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கருத்து குறித்த கேள்விக்கு, மத்திய அரசுடன் தொடர்புடையவர்கள் தான் செய்ய முடியுமென்றால் கூட்டாட்சி இந்தியா இல்லை. ஒரு ஏழை எம்எல்ஏவிற்கும் அதே பலம் உண்டு. அதை நிராகரிக்கும் பிரதமர் நல்ல பிரதமர் இல்லை என பதிலளித்தார்.

வானதியின் மைலாப்பூர் முகவரியை சொல்லட்டுமா? காந்தி தேசத்தின் தந்தை. அவர் பரமக்குடியில் பிறந்தது போன்று தான் தோன்றுகிறது.

நடிகர் ராதாரவி விமர்சனம் குறித்த கேள்விக்கு, அவர் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார். ராதாரவியின் குறைந்தபட்ச வேலையை கூட அமைச்சர்கள் செய்வதில்லை.ராதாரவியின் குற்றச்சாட்டுகள் முக்கியமில்லை. வருமான வரி சோதனை குறித்த கேள்விக்கு, எங்களது கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல.

உதயநிதி தயாரித்த படத்தில் நடித்திருந்தாலும் நான் நேர்மையானவன்.வாங்கிய பணத்திற்கு சரியாக வரி கட்டியுள்ளேன். அவர் நேர்மையை பற்றி எனக்கு தெரியாது.

மேலும் படிக்க