March 24, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாமணி மற்றும் காவல் துறை ஆணையராக இருந்த சுமித் சரண் ஆகியோரை தேர்தல் ஆணையம் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றியுள்ளது.
கோவை மாவட்ட கு.ராஜாமணி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக S நாகராஜன் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண் மாற்றப்பட்டு டேவிட் தேவாசிர்வாதம் புதிய கமிஷனராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.