March 23, 2021
தண்டோரா குழு
கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரவாக வட மாநில பெண்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார் கடந்த ஒரு வார காலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் தெற்கு தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்ட ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில் நேற்று சுக்ரவார் பேட்டை பகுதியில் வட இந்திய பெண்கள் “வானதி அக்கா ஜிந்தகி சொக்கா” என்ற முழக்கங்களுடன் ஆதரவு திரட்டிய நிலையில் இன்று பூ மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பகுதியில் உள்ள வட இந்தியப் பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் “நம்ம ஓட்டு தாமரை” என்று தமிழில் முழக்கமிட்டபடி ஆதரவு திரட்டினர்.