March 22, 2021
தண்டோரா குழு
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
கிணத்துகடவு சட்டமன்ற தொகுதியில் மையிலோரிபாளையம்,ஏலூர்,மாம்பள்ளியில், வழுக்குபாறை மாசித்திகவுடன்பதி, மயிலாம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று மக்களிடம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது,கிணத்துக்கடவு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி திருவதாக தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
கிணத்துக்கடவு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனை முற்றிலும் தீர்க்கப்படும். இரண்டு முறை குறிச்சி நகர் மன்ற தலைவராக இருந்துள்ளேன்.மக்கள் என்னை எளிதல் அனுமுக முடியும்.திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி” என்றார்.
இந்நிகழ்வுகளின் போது கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, அவைத்தலைவர் அக்ஷயா நாகராஜ், பகுதி கழக பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், எஸ்ஏ.காதர், ஒன்றிய செயலாளர் ஈபி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ சோழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.