• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையின் இந்தியன் முகம் நான் – கமல்ஹாசன் பேச்சு !

March 22, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட புலியகுளம் பகுதியில் ம.நீ.ம கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு வேட்பாளர்கள் கலந்துக் கொண்டனர், பின்னர் கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சை முத்து ஆகியோர் பங்குபெற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்

பொதுக் கூட்டங்களுக்கும், பரப்புரைக்கு செல்லும் போது மக்களிடம் இருந்து புதிய குரல், வருகிறது. அந்த குரல் இங்கேயும் வருகிறது. அது என்னவென்றால் ஜெயிச்சாச்சு, ஜெயிச்சாச்சு, ஆம் உங்களின் குரல் நம்பிக்கை தருகிறது. ஆனால் எங்களுடைய திட்டங்களை 50% நிறைவேற்றினால் தான் ஜெயிச்சாச்சு என்று உதாரணம் என்றார்.

மேலும் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள் என கேட்கிறார்கள்?? சீரழிந்து கிடக்கும் தமிழகத்தை சீரமைக்க வந்துள்ளோம். கிராம சபைகளை நாங்கள் மீட்டெடுத்தோம்.ஆனால் இதை நாங்களே கண்டுப்பிடித்தாக ஒருசிலர் நாடகம் ஆடினார்கள் என பேசினார்.அதேபோன்று நீங்கள் எந்த போராட்டத்திலும் பங்கேற்கவில்லை என்கிறார்கள்?? நான் சொல்கிறேன் சி.ஏ ஏ எதிராக போராட்டம் நடத்தினோம், கஜா புயலில் மாண்புமிகு ஹெலிக்காப்டரில் பார்வையிட்டார்கள்,ஆனால் நாங்கள் நடந்து சென்று மக்களை சந்தித்தோம்.மக்களின் தேவைகளை அதிகாரத்திற்கு வரும்முன்பே செய்தோம் எனவும் எங்களுக்கு காலில் விழும் கலச்சாரம் கிடையாது, கறைவேட்டி கிடையாது, உடையில் எங்களுக்கு ஒற்றுமை தேவையில்லை. எந்த விதத்திலும், வண்ணத்திலும் உடை நாங்கள் போட்டுக்கொள்வோம் என பேசினார்.

திமுக கட்சி வந்தது,காலத்தின் கட்டாயம் ஆனால் இப்ப அதே திமுகவை அகற்ற வேண்டியதும் , காலத்தின் கட்டாயம் தான் எனவும்
இலவசம் கொடுப்பதால் மக்களின் ஏழ்மை ஒழியாது,அதை நான் அடித்து சொல்வேன் என்றார்.பின்னர் ஆள் ஆளுக்கு ஆயிரம் எனவும் 1500 ரூபாய் என்று ஏலம் போடுவது இவர்களின் பணக்கார திமிரு, மொட்டை மாடியில் இருந்து தூக்கி எரிந்து எடுத்து கொள்ளுங்கள் என்கிறார்கள்! ஆனால் என் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்.மேலும் உழைப்பினால் வருவது தான்,மகளிருக்கு ஊதியம் அதை, தான் நான் கூறினேன்.அது கஜனாவில் இருந்து எடுத்து கொடுப்பதில்லை. திறன் மேம்பாட்டு ,கல்வி மூலம் நம்முடைய செல்வாக்கை உயர்த்தி கொள்ள வேண்டும், அப்படிதான் நான் என்னை உயர்த்தி கொண்டேன் எனவும் பேசினார்.

பின்னார் காரும், பங்களாவும் அப்படியே தான் வாங்கினேன்.அரசு அதை கொடுக்கவில்லை, நான் அதை தேடி வளர்ரத்துக் கொண்டேன் எனவும் என்னுடைய ஆசான்கள் எனக்கு அதை கற்றுக் கொடுத்தார்கள்.மேலும் விண்ணப்பத்தில் இருந்து சாதி நீக்கிவிட்டால்,சாதி ஒழிந்து விடுமா என்கிறார்கள்.நான் சொல்கிறேன் உடனே ஒழியவிட்டாலும் படிப்படியாக ஒழியும்.ஆம் என்னுடை மாப்பிளையிடம் சாதி கேட்க மாட்டேன்.என் மகளுக்கு பார்க்கும் மாப்பிளையின் ஜாதியை நான் கேட்க மாட்டேன் எனவும் விண்ணப்பத்தில் சாதி எடுத்ததை கிண்டல் அடிக்காதே என ஆவேசத்துடன் தெரிவித்தார்.

உடல் உறுப்புகளை சாதி பார்க்கமால் தானம் கொடுத்து வருகிறோம் எனவும் இரத்த தானம் கொடுத்து வருகிறோம். நாங்கள் சாதியை தூக்கி எறிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும் சேவை பெரும் சட்டத்தை இன்னும் நீட்டமால் வைத்துள்ளார்கள். அதை நடைமுறைபடுத்தினால்,நீங்கள் தட்டி கேட்பீர்கள் என்ற எண்ணம் வந்துவிடக்குடாது இவர்களுக்கு இருக்கின்றது. ஆனால் அதை நாங்கள் கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார். பின்னர் பெண்கள் பாதுகாப்பு பற்றி கேட்கிறார்கள், ஏன் பொள்ளாச்சி பக்கத்தில் தான் இருக்கீர்கள், உங்களுக்கு தெரியாதா?? என மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

அந்த வழக்கு பற்றி விசாரிக்கும் துறையில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு கிடையாது!! அப்படி தான் இந்த அரசு உள்ளது எனவும் விமர்சனம் செய்தார்.பெண்கள் பாதுகாப்பு பற்றி தெரிய வேண்டும் என்றால், ம நீ.ம பொதுக்கூட்டத்திற்கு வந்து பாருங்கள் என்றார். பின்னர் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்கும் எனவும்
நீட் தேர்வில் ஓட்டை இருக்கின்றது.அதில் இருந்த மாணவர்களை வெளியே எடுக்க முடியும் எனவும் அதற்கு வேறு பெயர் வைக்க முடியும்.அதற்கு நான் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். அப்போது கையில் செங்கோலை வைத்து காட்சிகொடுக்க மாட்டேன். டெல்லிக்கு போய் கர்ஜிப்பேன்,அதற்கு மக்கள் எங்களை வெற்றிபெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.பின்னர்
கோவையின் இந்தியன் முகம் நான் எனவும் மக்களிடம் பேசினர்.

மேலும் படிக்க