March 21, 2021
தண்டோரா குழு
மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் இன்று காலை முதலே கோவை கோட்டைமேடு பகுதியில் பொதுமக்களை சந்தித்தார்.
ஸ்டார் தொகுதியான கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். கோவையில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமல் இன்று கோவை கோட்டைமேடு பகுதியில் கமலுக்கு மேலாதளத்துடன் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.பின்னர் அவர் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தோடு இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து பேசினார்.பின்னர் காரில் நின்று கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கடந்த 40 ஆண்டுகளாக மின்சார தட்டுப்பாடு, குடிநீரில் கழிவு நீர் கலப்பு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் கோட்டைமேடு பகுதி மக்களிடம் தங்கள் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.அதன் பின் சில முக்கிய இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.மற்றும் வார்டு எண் 82 பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அலுவலக பணிமனையை திறந்து வைத்தார்.