March 20, 2021
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா. கார்த்திக் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக வேட்பாளராக நா. கார்த்திக் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று காலை 7 மணி அளவில் சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் தோழமைக் கட்சியான காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், போன்ற தோழமைக் கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், நீலிகோணம்பாளையம், எச்ஐஎச்எஸ் காலனி போன்ற பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரித்தனர்.