March 20, 2021
தண்டோரா குழு
கோவையில் கமல்ஹாசன் நடைப்பயிற்சி மேற்கொண்ட படியே மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
கடந்த 5 நாட்களாக கோவையில் தங்கியபடியே பல்வேறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதுடன், தான் போட்டியிடும் தெற்கு சட்டமன்ற தொகுதியிலும் பல்வேறு வகைகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நாள்தோறும் காலையில் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைப்பயிற்சி மேற்கண்டவாறு மக்களை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, காந்திபுரம் அன்னபூர்னா ஹோட்டலுக்கு சென்று காபி குடித்த கமலஹாசன், அங்கிருந்தவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார். நடிகர் கமலஹாசனுக்கு போற்றி பாடடி, பெண்ணே, தேவர் காலடி மண்ணே பாடலை ரசிகர் ஒருவர் பாடிகாட்ட, அதை அவர் ரசித்தார். தொடர்ந்து, கோவை பூ மார்க்கெட் பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் நடைபயிற்சி மேற்கொண்டபடி பிரச்சாரமும் செய்தார்.
பூ மார்கெட் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொது மக்களிடம் கமலஹாசன் வாக்கு சேகரித்தார்.அப்போது அவருடன் பேசவும், தற்படம் எடுத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் பொதுமக்கள் கூடினர். அப்போது யாரோ தவறுதலாக தலைவரின் காலை மிதித்து விட்டனர்.
சமீபத்தில்தான் அறுவைச் சிகிச்சை செய்த காலில் அடிபட்டதால்,உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனை பெறப்பட்டது. காலில் வீக்கம் இருப்பதால், ஓய்வு அவசியம் தேவை என மருத்துவர்கள் சொன்னதற்கிணங்க கமல்ஹாசன் ஓய்வில் இருக்கிறார்.